எத்தகைய சவால்கள் ஏற்படினும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள்!

Douglas Devananda Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fisherman
By Kalaimathy Jun 01, 2022 11:49 AM GMT
Report

இலங்கை மீன்பிடித் துறைமுகத்தினால், மீன்பிடிக் கலன்களுக்கான எரிபொருட்கள் விநியோகிக்கப்படுகின்ற நிலையில், தேவையானளவு எரிபொருட்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழலில், கடற்றொழில் அமைச்சிற்குள் உள்ளடங்கியுள்ள திணைக்களங்களினால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.

எத்தகைய சவால்கள் ஏற்படினும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள்! | Sri Lanka Fisher Man Douglas Meeting Fuel

அதன் போது கடற்றொழில் அமைச்சில் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நக்டா, நாரா, வடகடல், சீநோர் ஆகிய திணைக்களங்களின் நிறைவேற்று அதிகாரிகள், தாங்கள் எதிர்கொள்ளுகின்ற நடைமுறை சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடினர்.

கடலுணவுகளை பாதுகாத்து சந்தைக்கு அனுப்புவதில் காணப்படுகின்ற சவால்கள் தொடர்பாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தான அதிகாரிகளினால் எடுத்துக் கூறப்பட்ட நிலையில், நாட்டிற்கு குறிப்பிடத்தக்களவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற இறால் பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால்கள் உட்பட, பண்ணைகளில் வளர்க்கப்படுகின்ற கடலுணவுகளுக்கான உணவுகளை இறக்குமதி செய்வதற்கு தடையாக டொலர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

எத்தகைய சவால்கள் ஏற்படினும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள்! | Sri Lanka Fisher Man Douglas Meeting Fuel

அதேபோன்று, வடகடல் மற்றும் சீநோர் ஆகிய நிறுவனங்களின் உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் காணப்படும் இடையூறுகள் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

"தற்போதைய சூழலில், எம்மிடம் இருக்கின்ற உற்பத்திசார் வேலைத் திட்டங்களை தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் முன்கொண்டு சென்று வருமானத்தை உருவாக்குவதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய வேண்டும்.

எத்தகைய சவால்கள் ஏற்படினும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள்! | Sri Lanka Fisher Man Douglas Meeting Fuel

எனினும், விரைவில் அரச தலைவருடனான சந்திப்பின் போது, எரிபொருள் போன்ற அடிப்படை தேவைகளை முடிந்தளவு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து சாதகமான முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் " என்று தெரிவித்தார்.

மேலும், எவ்வாறான சவால்கள் ஏற்பட்டாலும் நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான கடலுணவு தாராளமாக - நியாயமான விலையில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், கடற்றொழில்சார் மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் வகையில், கடற்றொழில் அமைச்சு சார்ந்த அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.  

ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016