சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிலங்கா தேசிய கொடிகள்
கொழும்பில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான இலங்கை தேசிய கொடிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதியை நம்பியே இலங்கை மாறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்கள் முதல் ஆடைகள் மற்றும் வாகனங்கள் வரை பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் கூறினார்.
சுதந்திர தினத்தில் பயன்படுத்தப்படும் இலங்கைக் கொடிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் அமைச்சர் கூறினார். வெசாக் விளக்குகள் கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை தொடர்ந்தும் அனைத்தையும் இறக்குமதி செய்தால் டொலர்கள் எஞ்சியிருக்காது என கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் அதிக கவனம் செலுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
