திடீர் கைதிற்குள்ளான மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் பிணை தேவையற்றது எனவும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முனிலையானால் போதுமானது எனவும் மேர்வின் சில்வாவுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதை குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துமீறி நுழைந்தமையால் கைது
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு பிரவேசித்த சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபர் ஆலோசனை
சட்டமா அதிபரின் இந்த ஆலோசனை கடந்த வாரம் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்ததாகவும் உயர் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.