கோட்டாபய சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்டு தத்தளிப்பது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டதன் விளைவே!

Sri Lanka Army Ampara Gotabaya Rajapaksa Attempted Murder Sri Lanka
By Kalaimathy Aug 13, 2022 04:35 AM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார்.

இதன் காரணமாகவே சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிபவராக இருக்கின்றார் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் நேற்று மாலை கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கோட்டபாய ராஜபக்ச நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அத்துடன் பல நாடுகளில் அவருக்கான புகலிடம் மறுக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோட்டாபய இனப்படுகொலையை அரங்கேற்றியமையே காரணம்

கோட்டாபய சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்டு தத்தளிப்பது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டதன் விளைவே! | Sri Lanka Former President Gotabaya Singapore

அவரால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைக்கான விளைவினையே இன்று அவர் அனுபவிக்கின்றார். இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிகின்றார். 

இதற்கெல்லாம் காரணம் எமது தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினாலேயே.

அன்று முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதனால் தான் இன்று சிங்கள மக்களும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

காலிமுகத்திடலில் இன்று சடலங்கள் கரையொதுங்கும் நிலை காணப்படுகின்றது. சிங்கள மக்கள் கூட இன்று பயந்து நடுங்குகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

அன்று தமிழ் மக்கள் அனுபவித்த துயரத்தை தற்போது சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை இந்த நாட்டில் உருவாகியுள்ளது. எனவே தான் தமிழையும் தமிழ் தேசியத்தையும் என்றும் நாம் நேசிக்கின்றவர்களாகவே இருக்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் அரங்கேற்றிய படுகொலை

கோட்டாபய சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்டு தத்தளிப்பது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டதன் விளைவே! | Sri Lanka Former President Gotabaya Singapore

கடந்த 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வீரமுனையில் ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 55 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த படுகொலையில், 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 வருடங்கள் தொடர்ச்சியாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இவ்வாறான படுகொலைகளை மேற்கொண்ட இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.

மறக்கவும்மாட்டோம் மன்னிக்கவும்மாட்டோம்

கோட்டாபய சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்டு தத்தளிப்பது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டதன் விளைவே! | Sri Lanka Former President Gotabaya Singapore

எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்பும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நினைவேந்தலை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025