கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள சிறிலங்கா!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு மேலும் 14 நாட்கள் அனுமதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
இந்த தகவலை தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய எதிர்வரும் 11ம் திகதி விசா காலம் நிறைவடைந்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டிருந்தார்.
எனினும் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய கோட்டாபய இந்த மாத இறுதி வரையில் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போராட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களினால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கடந்த 14ம் திகதி சிங்கப்பூரிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்