சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணி நிறுவுவதற்கான முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த செயலணி சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள்
குறித்த விடயத்தை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டம் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறை
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரித்தல், அதற்கு அவசியமான முடிவுகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்களை ஒருங்கிணைந்த கட்டமைப்பின் கீழ் செயல்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத் துறையில் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன் போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை வெற்றிகரமாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்துறையினர்களுடன் எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியமும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
