யாழில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த வயோதிபப் பெண்ணை ஏமாற்றித் தப்பியோடிய இளைஞன்!
sri lanka
money
robbery
fuel
By Kalaimathy
மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு நபரொருவர் தப்பியோடியுளார்.
யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வயோதிப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த இளைஞன் ஒருவர் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. உடனடியாக மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தையும், போத்தலையும் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றவர்கள் ஊடாக நழுவி தப்பியோடியுள்ளார்.
நீண்ட நேரமாக மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த பெண், தான் காசு கொடுத்த இளைஞனை காணாது, ஏமாற்றத்துடன் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறிவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்