எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை!
கொழும்பு நாவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் போன்று மஞ்சள் நிற கலனுடன் முச்சக்கர வண்டியில் சென்ற 5 பேர் கொண்ட குழு, அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி, அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடக்கும் போது எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்களுடன் மக்கள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர். கொள்ளையர்கள் எவ்வளவு தொகை பணத்தை கொள்ளையிட்டுச் சென்றனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கொள்ளை சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளையர்களை துரிதமாக கைது செய்ய முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
