எரிபொருள் வரிசையில் நபர் ஒருவர் உயிரிழப்பு - முடிவின்றித் தொடரும் அவலம்!
களுத்துறை பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
களுத்துறை-பயாகல ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஐஓசி நிலையத்தில் உயிரிழந்த நபர்
வரிசையில் இருந்த நபருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 பேரைத் தாண்டியுள்ளது எனவும் தரவுகள் வெளியாகியுள்ளன.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்