எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் கைது!
Sri Lanka Police
Mullaitivu
Sri Lanka Police Investigation
Crime
By pavan
முல்லைத்தீவு செம்மலை பகுதியில் வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
மாவட்டப்பெருங்குற்றப்பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யபட்டுள்ளார்.
இச் சுற்றிவளைப்பின் போது, வீட்டில் இருந்த 45 லீட்டர் டீசல், 21 லீட்டர் பெட்ரோல் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
மேலும், மாவட்டப்பெருங்குற்றப்பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி