கிளிநொச்சி பாடசாலைகளில் வரலாறு படைத்த சாதாரண தரப் பரீட்சை மாணவர்கள்
புதிய இணைப்பு
தற்போது வெளியாகிய கா/பொ/த சாதாரண தரப்பெறுபேற்றில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பாடசாலையான வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை சாதனை படைத்துள்ளது.
1919 ஆம் ஆண்டு கா/பொ/த சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 2024 ஆம் ஆண்டு கா/பொ/த சாதாரண தரத்தில் தோற்றிய மாணவியான அ.மேரி இசாயினி 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்குபெருமை சேர்த்துள்ளார்.
வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் முதலாவது 9Aசித்தி இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் கரைச்சிக் கோட்டப் பாடசாலையான ஊற்றுப்புலம் அதக பாடசாலையின் வரலாற்றில் முதல் 9 ஏ பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி ஊறறுப்புலம் பாடசாலைச் சேர்ந்த சக்திவேல் குயிலன் என்ற மாணவனே இச் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான ஊற்றுப்புலத்தில் 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்றும் பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகிறது.
வறுமையான குடும்ப பொருளாதாரம்
நகரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாடசாலையைச் சேர்ந்த மாணவன் பாடசாலை கல்வியை பிரதானமாகவும் அக் கிராமத்தில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் மேலதிக கல்வியையும் பெற்றே இப்பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
வறுமையான குடும்ப பொருளாதாரத்தை கொண்டிருந்த போதும், குறித்த மாணவன் கற்று அனைத்து பாடங்களிலும் ஏ தரச் சித்தியை பெற்றிருப்பதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
