இஸ்ரேல் ராணுவத்துக்கு பிடித்த சாபம்: அடுத்தடுத்து உயிர் மாய்த்துக் கொள்ளும் வீரர்கள்!
காசா போரில் பங்கேற்ற இஸ்ரேல் ராணுவ வீரர்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது, ராணுவத்திற்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், தெற்கு இஸ்ரேலில் உள்ள Sde Teiman ராணுவ முகாமில் ஒருவர் தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணுவ விசாரணை
அவர் ஒரு மாதத்திற்கு முன்தான் அந்த முகாமில் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன், அவரின் நெருக்கமான நண்பர் ஒருவர் காசாவில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்திருந்தார்.
அதற்குப் பிறகு, அந்த வீரர்மீது ராணுவ விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவரிடம் இருந்த ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட வீரர், தனது சக ராணுவ வீரரின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தன்னை தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.அவர் கோலானி பிரிகேட் என்னும் சிறப்பு படைப்பிரிவைச் சேர்ந்தவர்.
21 வீரர்கள் தற்கொலை
இதற்குமுன், சபீட் என்ற நகரத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், மற்றொரு ராணுவ ரிசர்வ் வீரர், மன அழுத்தத்தால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.
2024ம் ஆண்டு மட்டும் 21 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர் என இஸ்ரேல் ஹயோம் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதை அடுத்து, இஸ்ரேல் ராணுவம் மனநல ஆலோசனைக் கூடங்கள் மற்றும் ஆலோசகர்கள் பலரை நியமித்து நடவடிக்கை எடுத்தாலும், போரால் ஏற்படும் மன அழுத்தம் ராணுவ வீரர்களை தொடர்ந்தும் பாதித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
