எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் - கஞ்சன வெளியிட்டுள்ள தகவல்!
கடந்த வார தரவுகளின் படி தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர். அமைப்பின் மூலம் எரிபொருள் விற்பனை மற்றும் சாதாரண எரிபொருள் விநியோகத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை மூலமான எரிபொருள் விநியோகம் மற்றும் சாதாரண எரிபொருள் விநியோகம் என்பவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம்
கடந்த வாரம் 60 வீதத்துக்கும் குறைவாக இருந்த எரிபொருள் விநியோகம் தற்பொழுது 80 வீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், பண்டிகைக் காலங்களில் விநியோகிக்கப்படும் நாளொன்றுக்கான எரிபொருளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Fuel sales & distribution update -
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 12, 2023
Data from the last 7 days of fuel sales shows a significant improvement of fuel sales & sales through the National Fuel Pass QR system. Overall percentages which was below 60% last week has improved to above 80% with the temporary suspension of… pic.twitter.com/4RzBI7YjKT
குறித்த அதிகரிப்பினால் 4,650 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் 5,500 மெற்றிக் தொன் ஓட்டோ டீசல் என்பவை நாளாந்தம் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
