சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் - காவல்துறையின் உடனடி நடவடிக்கை!
நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்த மூவரே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பதுளை பசறை மற்றும் எதிமலே ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடாபில் மேலும் தெரியவருகையில்,
பிணையில் விடுதலை
60 லீட்டர் டீசலுடன் 40 வயதான நபர் நேற்று பசறை பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனையடுத்து அவர் எதிர்வரும் 30 ஆம் திகதி பசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் காவல்துறை பிணையில் விடுவித்துள்ளனர்.
இதனிடையே சபுகஸ்கந்தை இஹல பியன்வில பிரதேசத்தில் 460 லீட்டர் டீசலுடன் 48 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள சந்தேக நபர்கள்
கடவத்தை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அத்துடன் 1220 லீட்டர் பெற்றோலை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 60 வயதான நபர் நேற்று எதிமலே பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
