பிணங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்கழு அதிகாரி ஒருவரை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் 21 வயதுடைய மகள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் இன்று (07) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் (Dr. Maheshi Wijeratne) மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரி ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்ன உட்பட மூவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூளை அறுவை சிகிச்சை
வைத்தியர் மகேஷி விஜேரத்ன ரூ. 50,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்களை ரூ. 175,000 க்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், இறந்த நோயாளிகளுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் சாட்சியமளித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தனது தனியார் நிறுவனம் மூலம் விற்கப்பட்ட அறுவை சிகிச்சை உபகரணங்களை பணத்திற்கு நோயாளிகளுக்கு வழங்கும் நோக்கில் இறந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், மூளை இறந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு நோயாளியின் இதயம் ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாகவும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி எங்கும் உயிருடன் விதைக்கப்பட்ட மக்கள் - சர்வதேச தலையீடு அவசியம்: இயக்குனர் டி.ராஜேந்தர் கோரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
