எரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலி - முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் மாற்றம்! விசேட அறிவித்தல்
எரிபொருள் விலை அதிகரிப்புடன், முச்சக்கர வண்டி கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 80 ரூபாவும் அறவிடப்படும் என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினாலேயே முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனமும் தமது பெற்றோலின் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
