எரிபொருள் சூத்திரத்தில் சதி! 200 ரூபாவிற்கு எரிபொருளை வழங்க முடியும் - வெளிச்சத்திற்கு வந்த தகவல்
200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கோப் குழு கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அடிப்படை தன்மையில்லா சூத்திரம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "பெட்ரோலியக் கூட்டுதாபனம், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கும் போது பிரச்சினை ஒன்று உள்ளமை தெரியவந்ததது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது, குறித்த அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள சூத்திரமானது, எந்தவித அடிப்படை தன்மையும் இல்லாமல் உள்ளதோடு அதற்கமைய விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான கட்டணம் மற்றும் அதற்கான வரி என்பன தொடர்பில் நாம் ஆராய்ந்துள்ளோம்.
அவற்றுக்கு இடையில் 150 ரூபா முதல் 200 ரூபா வரையான வித்தியாசம் காணப்படுகிறது", எனக் குறிப்பிட்டார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்