வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு செலவிடப்படும் மொத்த தொகை: வெளியான தகவல்
வாகன உரிமையாளர்கள் தங்களது வாராந்த QR ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ளச் செலவிட வேண்டிய மொத்த தொகை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
புதிய விலையேற்றத்தின்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் 398 ரூபாயாகவும் ஒட்டோ டீசல் 382 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தினால் உந்துருளி உரிமையாளர்கள் எட்டு லீற்றர் பெட்ரோலைப் பெற 3,184 ரூபாயும் (92 ஒக்டேன்), முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் 20 லீற்றர் ஒதுக்கீட்டிற்காக 7,960 ரூபாயும் செலவிட வேண்டியுள்ளது.
அதிகமான தொகை
சிற்றுந்து (Car) உரிமையாளர்கள் 25 லீற்றர் பெட்ரோலைப் பெற 9,950 ரூபாய் வரை செலவழிக்க நேரிடும்.
டீசல் வாகனங்களைப் பொறுத்தவரையில் சிற்றூந்துகளுக்கு 9,550 ரூபாயும் பேருந்துகளுக்கு வாராந்த ஒதுக்கீட்டிற்காகச் சுமார் 38,200 ரூபாய் வரையும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாத காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொடர் விலை திருத்தங்கள் மூலம் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் லீற்றருக்குச் சராசரியாக 100 ரூபாய்க்கும் அதிகமான தொகையினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேசச் சந்தை நிலவரம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த அதிரடி விலை உயர்வு பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் போக்குவரத்துத் துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |