செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் பேசிய காவல்துறை அதிகாரி!
கொழும்பில் காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவங்களை செய்தி சேகரிக்க முற்பட்ட ஊடகவியலாளர் ஒருவரை சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இன்று அதிகாலை அதிபர் செயலகத்தை உள்ளடக்கிய பிரதேசத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து அரச கட்டிடத்தை ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்களை வெளியேற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர் தரிந்து உடுவேகெதர என்ற ஊடகவியலாளர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அந்நிலையில், காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று அவரது கடமைகளை மேற்கொள்வதற்காக பிரதேசத்திற்குள் பிரவேசிக்க விடாமல் தடுத்துள்ளனர்.
இது தொடர்பில் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. அத்துடன் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகவியலாளரை அணுகி தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் அந்த காணொளியில் அவதானிக்க முடிகிறது.
Journalist Tharindu Uduwegedara was obstructed by the police in the Galle Face. #Lka pic.twitter.com/nKR7ExJJjI
— Manjula Basnayake (@BasnayakeM) July 22, 2022