தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்தல்- கோட்டா கோ கமவில் வடக்கின் கோரிக்கைகள்!

Galle Face Protest Sri Lanka SL Protest Northern Province of Sri Lanka
By Kalaimathy Jun 02, 2022 11:23 AM GMT
Report

சிறிலங்கா அரச தலைவருக்கு எதிராக காலி முகத்திடலில் சுமார் இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் வடக்கில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை உள்ளடக்குவதாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தென்னிலங்கை தலைவர்கள் குழு உறுதியளித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் இருந்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்களும் வடக்கில் உள்ள தொழிற்சங்க தலைவர்களும் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க அலுவலகத்தில் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

வடக்கு தெற்கு குழுவினர் சந்திப்பு

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்தல்- கோட்டா கோ கமவில் வடக்கின் கோரிக்கைகள்! | Sri Lanka Galle Gota Go Gama Protest Northern

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி ஊழியர் சங்கம், சம உரிமைகள் இயக்கம், பொது நிர்வாக அதிகாரிகள் சங்கம், மீன்பிடி கூட்டுறவு இயக்கம், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம், மின்சார அதிகாரசபை அதிகாரிகள் சங்கம் உட்பட சுமார் 20 தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இதில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை வீடு செல்லுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வடக்கு மக்களின் ஆதரவின்மைக்கான காரணங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழர் கோரிக்கைகள்

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்தல்- கோட்டா கோ கமவில் வடக்கின் கோரிக்கைகள்! | Sri Lanka Galle Gota Go Gama Protest Northern

பல தசாப்தங்களாக தம்மைப் பீடித்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் காலிமுகத்திடல் போராட்டத்தில் போதியளவு குரல் கொடுக்காமையே இதற்குக் காரணம் என வடக்கின் பிரதிநிதிகள் கொழும்பில் இருந்து வந்த பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குதல், பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம் மற்றும் வடக்கின் இராணுவமயமாக்கல் போன்ற விடயங்களை வலியுறுத்தி காலி முகத்திடலில் குரல் எழுப்பப்பட வேண்டும் என வடக்கின் தொழிற்சங்க தலைவர்கள் தெற்கில் உள்ள தொழிற்சங்க தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தெற்கு போராட்டத்தில் இணையும் வடக்குக் கோரிக்கை

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்தல்- கோட்டா கோ கமவில் வடக்கின் கோரிக்கைகள்! | Sri Lanka Galle Gota Go Gama Protest Northern

வடக்கில் தொழிற்சங்கத் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் தெற்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, காலி முகத்திடலில் நடைபெறும் போராட்டத்தில் அந்தக் கோரிக்கைகளை இணைக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண தொழிற்சங்கத் தலைவர்களுக்கு தானும் தனது குழுவினரும் உறுதியளித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

தேசியப் பிரச்சினை மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பில் தெற்கில் உரையாடல்களை விரிவுபடுத்த வேண்டுமென வடக்கின் தொழிற்சங்கத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.   

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி