இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை!

United Nations Sri Lanka Economic Crisis Sri Lanka Child Abuse
By Kalaimathy Aug 17, 2022 11:51 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அறிக்கையொன்று, இலங்கை அடிமைத்தனத்தை ஒழிக்கத் தவறியுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

இதில் பெருந்தோட்டத் துறை, ஆடை உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அப்பாற்பட்டு, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக வீட்டுப் பணியாளர்களாகவும் பணிப்பெண்களாகவும் பணிபுரியும் வறுமையில் வாடுபவர்கள் வரை பல மட்டங்களில் இந்த அடிமைத்தனம் பரவலாக காணப்படுகின்றது.

12 செப்டம்பர் முதல் ஒக்டோபர் 7 வரையிலான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஐம்பத்தோராவது கூட்டத்தொடருக்காக, அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் உள்ளிட்ட விடயங்களுக்கான விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டா, அளித்த அறிக்கையில்,

“சிறுவர் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்ட மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அதன் மோசமான வடிவங்கள் உட்பட, அது இன்னும் இலங்கையில் நீடிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் போது வெளியான கருத்து

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! | Sri Lanka Garment United Nation Dollar Child Abuse

பல்வேறு காரணங்களை முன்வைத்து சர்வதேச நிதியுதவி அல்லது நன்கொடை நிறுவனங்கள் தங்களது நிதியுதவியை நிறுத்திவைத்துள்ள நிலையில், இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் வேளையில் ஐ.நாவின் இந்த வலுவான கருத்து வெளியாகியுள்ளது.

தீவிரமான சமூகப் பிரச்சினைகள் “குறிப்பாக மலையகத் தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் போன்ற சிறுபான்மையினர் வசிக்கும் ஏழ்மையான கிராமப்புறங்களில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர்.

அங்கு சில சிறுவர்கள், குறிப்பாக சிறுமிகள் தங்கள் குடும்பத்திற்கு உதவுவதற்காக படிப்பை கைவிட்டு பாடசாலையிலிருந்து வெளியேறும் மோசமான சூழ்நிலை நிலவுகிறது.

உதாரணமாக, பெருந்தோட்டத் துறையில், மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் தரமற்ற கல்வி மற்றும் வசதிகள் குறைபாடும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது என ஐ.நா.வுக்கு அவர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் ஜப்பானிய அறிஞரின் அறிக்கை

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! | Sri Lanka Garment United Nation Dollar Child Abuse

சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஜப்பானிய அறிஞரான டொமோயா ஒபோகாட்டா , நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், மனித கடத்தல் மற்றும் நவீன அடிமைத்தனம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற அவர் தனது அறிக்கையில், சுற்றுலாத் துறையில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதாகவும் இது கவலையளிக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அதிக அந்நியச் செலாவணியை ஈட்டும் தொழில்கள் இரண்டு - பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஆடை உற்பத்தி ஆகியன ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரின் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளன.

இந்த இரண்டு துறைகளிலும் இதர துறைகளை தவிர வெவ்வேறு வடிவங்களில் அடிமைத்தனம் பரவலாக இருப்பதை அவரது அறிக்கை கண்டறிந்துள்ளது.

அவரது அறிக்கைக்கு அமைய "கட்டாய திருமணம் என்பது அடிமைத்தனத்தின் ஒரு சமகால வடிவமாகும், மேலும் இலங்கையின் சூழலில், பொதுவாக வறுமை, பாடசாலை இடைவிலகல், இளமைக்கால கர்ப்பம் மற்றும் பிற காரணிகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.”

இலங்கையில் அடிமைத்தனத்தால் பெண்களும் சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! | Sri Lanka Garment United Nation Dollar Child Abuse

பெருந்தோட்டத் துறை அடிமைத்தனத்திற்கு ஒரு தெளிவான உதாரணம் என அவரது அறிக்கை சாடியுள்ளது. இலங்கையில் தற்கால அடிமைத்தனத்தால் பெண்களும் சிறுமிகளும் ஒப்பீட்டளவிலான விகிதாசாரத்தில் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ பாணியிலான செயற்பாடும் டோமோயா ஒபோகாட்டாவிடமிருந்து கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் போன்ற தனியார் வணிகங்களில் இராணுவ அதிகாரிகளை பணியமர்த்துவது பற்றி குறிப்பிடுகையில்,

"நிர்வாகத்தின் தலைமை உட்பட, அதில் இராணுவ ரீதியிலான கட்டுப்பாட்டைத் திணிப்பது கவலை அளிக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இது தொழிலாளர்கள் மத்தியில் அச்ச சூழ்நிலையுடன் கூடிய கலாசாரத்தை உருவாக்க வழிவகுக்கிறது.

"சில ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தொழிலாளர்களை அச்சுறுத்தியமை, துன்புறுத்துதியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட சில சம்பவங்கள் குறித்து ஐ.நாவின் சிறப்பு அதிகாரியான டொமாட்டோவிற்கு தெரியப்படுத்தப்பட்டது".

சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடைத் தொழில் துறையில் பணிபுரிபவர்களின் அவல நிலை, ஐ.நா அறிக்கைக்கு அமைய, பணியிட துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் போன்றவற்றில் எவ்வகையிலும் குறைந்து காணப்படவில்லை.

ஐ.நா.வின் அடுத்த அமர்வில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ள ஒபோகாட்டா, மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் "உடல், வாய்மொழி மற்றும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற அதிக அளவிலான சுரண்டல் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

நாட்டில் காணப்படும் பரந்துபட்ட கொத்தடிமை தனத்திற்கு மொழித் தடை மற்றும் இனப் பரிமாணம், நுண் கடனுதவியின் தீய வட்டமும் அதன் மரணப் பொறி போன்றவையும் காரணிகளாக உள்ளன என்பவை அவரது அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

கடனுக்கான அதிக வட்டி விகிதங்கள் காரணமாக, பல பெண்கள் கடனை செலுத்த முடியாமல் கொத்தடிமைகளாக மாறியுள்ளனர். இது அண்மைய ஆண்டுகளில் 200ற்கும் மேற்பட்ட பெண்களின் தற்கொலைக்கு வழிவகுத்தது என அவரது அறிக்கை கூறுகிறது.

பரவலான வறுமையால் பாதிக்கப்படக்கூடிய பெண்களை பாலியல் வேலைக்குத் தள்ளப்படுவதும் அவரது அறிக்கையில் இடம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, சுவிஸ், Switzerland, Maastricht, Netherlands

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, பேர்லின், Germany, Warendorf, Germany, கொக்குவில்

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025