அதிபர் ரணில் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்
Ranil Wickremesinghe
Sri Lanka Government Gazette
By Vanan
அரச சேவைகள் பலவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஒப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இடையூறு ஏற்படுவதை தவிர்த்தல்
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காக அத்தியாவசியமான சேவைகளுக்கு பாதிப்பு அல்லது இடையூறுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மின்சாரம் விநியோகம் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி