சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் 'ஜெனிவா பக்கநிகழ்வு'
ஐ.நா மனிதஉரிமை பேரவையில் தற்போது இடம்பெற்று வரும் 54 வது கூட்டத் தொடரில் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா மேற்கொண்ட குற்றங்களுக்கு பொறுப்புக் கோருவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்த ஆய்வுகளுக்குரிய வகையில் ஜெனிவாவில் இன்று பக்கநிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைச் செயற்பாடுகளுக்கான இணைப்பாளர் சுதா எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.
ஆதர கொடுத்த அமைப்புகள்
இன்று காலை 9 மணிமுதல் பத்து மணிவரை இடம்பெற்ற இந்த நிகழ்வை தமிழகத்தை தளமாக கொண்ட பசுமைத்தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தநிகழ்வுக்கு பிரித்தானிய தமிழர்பேரவை, சுவிஸில் இயங்கும் தமிழர்களுக்கான நடவடிக்கைகுழு,அமெரிக்காவை சேர்ந்த யு.எஸ் ரக் எனப்படும் தமிழர் நடவடிக்கை குழு ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.
இதனைவிட முக்கியமான அனைத்துல பேராளர்களும் இந்த நிகழ்வில் காணொளி வழியாகவும் நேரிலும் கலந்து கொண்டிருந்தனர்.