உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

Sri Lanka Ukraine Russian Federation
By Kalaimathy Jun 17, 2022 09:47 AM GMT
Report

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் தொடர்பான குறியீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டு 103வது இடத்தில் இருந்த இலங்கை, 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலின் படி 90 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கைக்கு 90 வது இடம் கிடைத்துள்ளது. குளோபல் பீஸ் இன்டெக்ஸ்( Global Peace Index) இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

நாடுகளின் தரப்படுத்தல்

உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! | Sri Lanka Global Peace Index Ukraine Russia War

பயங்கரவாத செயற்பாடுகள், அரசியல் ஸ்திரமின்மை, அரசியல் பயங்கரவாதம், அயல் நாடுகளுடனான உறவுகள், அகதிகள், இடம்பெயர்வுகள், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் ஆகிய பலவற்றை கவனத்தில் கொண்டு இம்முறை தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து, அயர்லாந்து, டென்மார்க் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

பின்னுக்குத்தள்ளப்பட்ட ரஷ்யா

உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! | Sri Lanka Global Peace Index Ukraine Russia War

தரப்படுத்தலில் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள 5 இடங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா, ரஷ்யா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு 90 நாடுகளின் முன்னேற்றங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 71 நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் 5வது ஆண்டாக உலகின் மிகவும் ஆபத்தான நாடாக இருந்து வருகிறது. அத்துடன் உலக அமைதி குறியீட்டில் உக்ரைன் மிகப் பெரிய சரிவை பதிவு செய்துள்ளது.

ரஷ்ய படையினர், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, உக்ரை 17 இடங்கள் கீழ் நோக்கி சென்று 153வது இடத்தில் உள்ளது. அதேவேளை ஐஸ்லாந்து கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து உலகில் அமைதியான நாடுகளின் குறியீட்டில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

சீரழிவை எதிர்நோக்கியுள்ள நாடுகள்

உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! | Sri Lanka Global Peace Index Ukraine Russia War

மேலும் உக்ரைன், கினியா, புர்கினா பாசோ, ரஷ்யா மற்றும் ஹைட்டி ஆகிய ஐந்து நாடுகள் உலகில் அமைதியான நாடுகளின் குறியீட்டின் அடிப்படையில் மிகவும் சீரழிவை எதிர்நோக்கியுள்ள நாடுகளாகும்.

அதேவேளை எகிப்து, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அல்ஜீரியா நாடுகள் உலகில் அமைதியான நாடுகள் வரிசையில் முன்னேற்றமடைந்துள்ளன. இதனிடையே உலகில் மிகவும் அமைதியான பிராந்தியமாக ஐரோப்பா குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள 10 நாடுகளில் 7 நாடுகள் மிகவும் பாதுகாப்பான நாடுகள் என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குறியீட்டு அறிக்கையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த 8 ஐரோப்பிய நாடுகள் தற்போது முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றன. போர்த்துக்கல் 6வது இடத்திலும் ஸ்லோவேனியா 7வது இடத்திலும் செக் குடியரசு 8வது இடத்திலும் உள்ளன.

சிங்கப்பூர் 9வது இடத்திலும் ஜப்பான் 10வது இடத்திலும் உள்ளன. சுவிஸர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் 11 மற்றும் 12 இடங்களில் உள்ளன. 

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்