மக்களின் நம்பிக்கையை சிதைத்த கோட்டாபய ரணிலையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Government Of Sri Lanka SL Protest
By Kalaimathy Jun 14, 2022 07:07 AM GMT
Report

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒவ்வொருவரிடமும் பந்தை கைமாற்றாது, பொறுப்பை தான் ஏற்று பதவியில் இருந்து விலக வேண்டும் என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

குறுகிய காலத்திற்குள் வளர்ச்சி

மக்களின் நம்பிக்கையை சிதைத்த கோட்டாபய ரணிலையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்! | Sri Lanka Gotabaya Podujana Peramuna Ranil Peoples

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப கடும் அர்ப்பணிப்புகளை செய்து, பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டது. மிக குறுகிய காலத்தில் அந்த கட்சியை சூழ பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டனர்.

அந்த கட்சி 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் நாட்டை கட்டியெழுப்புவார் என்ற கடும் நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை மக்கள் தெரிவு செய்தனர்.

பெரமுனவிற்கு பின்னால் திரண்ட மக்கள்

மக்களின் நம்பிக்கையை சிதைத்த கோட்டாபய ரணிலையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்! | Sri Lanka Gotabaya Podujana Peramuna Ranil Peoples

எனினும் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை சிதைக்க ஆரம்பித்தார். இதுவே தற்போதைய குழப்பமான நிலைமைகளுக்கு ஆரம்பம். தமது பெற்றோரை போன்று நேசித்த கட்சியை விட்டே அனைவரும் பொதுஜன பெரமுவுக்கு பின்னால் திரண்டனர்.

பெரிய நம்பிக்கையை வைத்தே அவ்வாறு இணைத்தனர். 69 லட்சம் வாக்குகள் கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இல்லை, உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது இவர்கள் எவரும் இருக்கவில்லை.

பதவி அர்ப்பணிப்பால் கிடைத்த வெற்றி

மக்களின் நம்பிக்கையை சிதைத்த கோட்டாபய ரணிலையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்! | Sri Lanka Gotabaya Podujana Peramuna Ranil Peoples

பதவிகளை அர்ப்பணிப்பு செய்தவர்கள் காரணமாகவே வெற்றி கிடைத்தது. நாளுக்கு நாள் அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்ததன் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்தனர்.

நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றவரின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதார, அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது என்பது இரகசியமான விடயமல்ல.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியமையை, தான் எடுத்த சிறந்த முடிவு என கோட்டாபய நினைப்பார் என்றால், அதுவும் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவை போன்றதாகவே இருக்கும்.

வலுவிழந்த கட்சிகள்

மக்களின் நம்பிக்கையை சிதைத்த கோட்டாபய ரணிலையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்! | Sri Lanka Gotabaya Podujana Peramuna Ranil Peoples

தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவிழந்து விட்டன. போராட்டகாரர்களுக்கு கூறுவது தவறு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தோம். போராட்டகாரர்கள் கூறுவது சரி என்பது தற்போது எமக்கு புரிகிறது.

நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து போகுமாறு கூறிய பின்னர், ரணில் விக்ரமசிங்கவை நியமித்தது, நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்க அல்ல. வீழ்ந்து போயுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

எனினும் அவர் வேறு வேலைகளை செய்து வருகிறார். இதனால், அரச தலைவர் பிரதமரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025