கோட்டாபயவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கத் தயாராகும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!
சிறிலங்கா அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்க தயார் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளியான அறிவிப்பையடுத்தே அக்கட்சியின் பொதுசெயலாளர் செல்வராசா கஜேந்திரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கோட்டாபாய அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் எனவும அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
