பொருட்களுக்கான கட்டுப்பாடு ஓர் பிழையான தீர்மானம்! அரசுக்கு அறிவுரை
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாடு ஓர் பிழையான தீர்மானம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
டொலர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
எனினும், இந்தத் தீர்மானத்தின் மூலம் டொலர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட முடியாது என புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கத்தின் இறக்குமதி பொருள் கட்டுப்பாட்டினால் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
அதன்படி மொத்த இறக்குமதியில் நுகர்வுப் பொருட்கள் மொத்தமாக 22 வீதமாகும் எனவும், இதில் உணவுப் பொருட்களின் பங்களிப்பு வெறும் 07 வீதமாகும். ஆயினும் மொத்த இறக்குமதிச் செலவில் 78 வீதமான செலவுகள் எம்மால் கட்டுப்படுத்த முடியாதவை.
இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்து நண்பர்களுக்கு மட்டும் சலுகை வழங்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
