நிறுத்தப்பட்டது இலங்கைக்கான வெளிநாட்டுப் பணம்!
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Development
By Kalaimathy
இலங்கைக்குள் நடைபெற்று வந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு வழங்கிய நிதியுதவிகள் அனைத்தையும் நிறுத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளிநாட்டு அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல், சமூக ஸ்திரமற்ற நிலைமையை காரணமாக கொண்டு அந்த அமைப்புகள் நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு தன்னார்வ அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு அரச நிறுவனங்களினால் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி