ஜனவரி மாத மொத்த அரச வரி வருமானம் மற்றும் அரச செலவீனம் வெளியானது!
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lanka Government
Economy of Sri Lanka
By Pakirathan
அரசாங்கத்தின் ஜனவரி மாதத்திற்கான வரி வருமானம் மற்றும் அரச செலவுகள் தொடர்பில் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலின்படி, அரச வரி வருமானத்தை விட அரச செலவுகள் இரு மடங்கைத் தாண்டியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச வரி வருமானம் மற்றும் அரச செலவீனம்
அந்தவகையில் ஜனவரி 27 ம் திகதி வரை, 158.7 பில்லியன் ரூபாய்களை அரசாங்கம் வரி வருவாயாகப் பெற்றுள்ளதுடன், அரச செலவீனம் 367.8 பில்லியன்களாக உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
குறித்த அரச செலவீனங்களில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி