அரசாங்கம் பதவி விலகாவிட்டால்... ஆளும் கட்சிக்குள் இருந்தே விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!
minister
sri lanka
government
parliament
press meet
By Kalaimathy
மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இந்த அரசாங்கம் பதவியில் நீடிக்க முற்படுமானால், சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நிமல் லன்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆட்சியை மாற்று தரப்பினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 50 இற்கு மேற்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ளனர்.
இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும், நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஒருவரிடம் ஆட்சியை கையளிக்க வேண்டும். அதனைவிடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முற்பட்டால், நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்வோம்.
அத்துடன் எதிரணிகளிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி