மக்களை சுரண்டி சுகபோகம் அனுபவிக்கும் அரசாங்கம் குறித்து வெட்கப்பட வேண்டும்!

Parliament of Sri Lanka Sri Lanka Government Of Sri Lanka Imran Maharoof
By Kalaimathy Oct 18, 2022 07:24 AM GMT
Report

நாட்டு மக்களுக்கு உதவுவதைவிட மக்களிடம் இருந்து உறிஞ்சி தம்மை வளப்படுத்திக் கொள்ளும் அரசு நம் நாட்டில் இருப்பது குறித்து அனைவரும், வெட்கமும் வேதனையும் அடைய வேண்டியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் என்பது பொதுமக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்தி பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இத தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கயைில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய அரசாங்கம் பல்வேறு புதிய வரிகளை நடைமுறைப்படுத்தி பொதுமக்களை உறிஞ்சுவதற்கு தயாராகி வருகின்றது. அரசாங்கம் கஷ்டத்தில் இருக்கும் போது பொதுமக்கள் வரிகளை செலுத்தி அரசாங்கத்துக்கு உதவ வேண்டியது முக்கியம் தான்.

பொதுமக்கள் மீது வரிச்சுமை

மக்களை சுரண்டி சுகபோகம் அனுபவிக்கும் அரசாங்கம் குறித்து வெட்கப்பட வேண்டும்! | Sri Lanka Government Parliament Sjb Imran Media

இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இந்த அரசாங்கம் தங்களது கட்சி சார்ந்தவர்கள் சுகபோகம் அனுபவிப்பதற்கான எற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து அதனால் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய பல்வேறு வரிகளை பொதுமக்கள் மீது சுமத்த முனைவது எற்றுக் கொள்ள முடியாதது.

எப்போதோ கலைக்கப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து தேர்தல் நடத்தப்படும் வரை விசேட ஆணையாளர்களின் கீழ் இவற்றைக் கொண்டு வந்திருந்தால் மாதாந்தம் பல நூறு மில்லியன் ரூபாய்களை மீதப்படுத்த முடியும்.

தமது கட்சி ஆதரவாளர்கள் மாதாந்தம் கொடுப்பனவுகள் பெற வேண்டும். வரப்பிரசாதங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவற்றை கலைக்காமல் நீடித்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயமானது எனக் கேட்க விரும்புகின்றேன்.

நாடு இப்போது இருக்கும் சூழ்நிலையில் பெரிய அமைச்சரவையும், பெரிய எண்ணிக்கையிலான பிரதி அமைச்சர்களும் தேவையில்லை.

எனினும் அரசாங்கம் தமது கட்சிக்காரர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக பெரிய அமைச்சரவையையும், அதிக பிரதி அமைச்சர்களையும் நியமித்துள்ளது.

சுகபோகம் அனுபவிக்கும் அரசாங்கம்

மக்களை சுரண்டி சுகபோகம் அனுபவிக்கும் அரசாங்கம் குறித்து வெட்கப்பட வேண்டும்! | Sri Lanka Government Parliament Sjb Imran Media

இதற்காக மாதாந்தம் சுமார் 100 மில்லியன் ரூபாய்களை செலவிடுகின்றது. ஒப்பந்த அடிப்படையில் உத்தியோகத்தர்களை நியமிக்கக் கூடாது என்று கூறும் அரசாங்கம் ஓய்வுபெற்ற தமக்கு நெருங்கியவர்களை அமைச்சு செயலாளர்களாவும், திணைக்களத் தலைவர்களாகவும் ஒப்பந்த அடிப்படையில் நியமித்து மேலதிக செலவுகளைச் செய்து வருகின்றது.

இந்த செலவுகளை ஈடுசெய்வதற்காகவே அரசு புதிய புதிய வரிகளை மக்கள் மீது நடைமுறைப்படுத்துகின்றது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் தங்களது சுகபோகத்திற்காக மக்களைச் சுரண்டும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இதனை பொதுமக்களும், அரச உத்தியோகத்தர்களும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கயைில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025