உலக நாடுகளுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தையில் மைத்திரி- உடனடியாக பொதுத் தேர்தலுக்கு வலியுறுத்தல்!

Election Commission of Sri Lanka Maithripala Sirisena Sri Lanka Economic Crisis Sri Lanka China
By Kalaimathy Jun 11, 2022 07:36 AM GMT
Report

நாட்டில் தற்போதைய அரசாங்கம் மாறும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் வெளிநாடுகளின் உதவிகளை பெற வேண்டுமாயின் குறிப்பிட்ட காலத்திற்கு சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து, உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவர் சீ.சேன் ஹொங்க் உடன் நேற்று பொலநறுவை புதிய நகரில் உள்ள மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.   பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சம்

உலக நாடுகளுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தையில் மைத்திரி- உடனடியாக பொதுத் தேர்தலுக்கு வலியுறுத்தல்! | Sri Lanka Government Politics Maithribala China

எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என்ன கூறினாலும் நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நாட்டின் உணவு உற்பத்தி சகல விதத்திலும் பாதிக்கப்பட்டுள்ளது.

உரம், எரிபொருள், கிருமி நாசனி என்பன இல்லை. இந்த நிலைமையில், நெல் பயிர் செய்கை மாத்திரமல்ல, காய்கறி, பழங்கள், தேயிலை, தனியங்கள், சோளம் என அனைத்து உணவு உற்பத்திகளும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

இப்படி அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு நெருக்கடியில் இருந்து மீள முடியாது. இதற்காகவே நாங்கள் சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.

பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்

உலக நாடுகளுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தையில் மைத்திரி- உடனடியாக பொதுத் தேர்தலுக்கு வலியுறுத்தல்! | Sri Lanka Government Politics Maithribala China

நான் இதனை அண்மையிலும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து, குறுகிய காலத்திற்கு அரசாங்கம் ஒன்றை அமைத்து, பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

அப்போது பல உலக நாடுகள் எமக்கு உதவும் நாங்கள் பல ராஜதந்திர பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சர்வதேச நிறுவனங்களுடன் நான் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.

சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைத்து, தேர்தல் தினத்தை தீர்மானத்தால், பல நாடுகள் இதனை விட அதிகளவில் உதவும் என அவர்கள் கூறுகின்றனர். நாட்டில் தற்போதுள்ள பிரதான பிரச்சினை பட்டினி, உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பது.

உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும்

உலக நாடுகளுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தையில் மைத்திரி- உடனடியாக பொதுத் தேர்தலுக்கு வலியுறுத்தல்! | Sri Lanka Government Politics Maithribala China

அதேவேளை 21 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தினால், உலக நாடுகள் உதவ முன்வரும்.

ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு அதிகாரம் செல்வதை விட நாடாளுமன்ற ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டால், உலக நாடுகள் அதனை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்