விடுதலை செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்! இலங்கை அரசின் அதிரடி நடவடிக்கை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று (4) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை நீதிமன்றில், நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடலில் கடந்த 21 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இந்திய கடற்றொழிலாளர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு தாக்கல்
கைது செய்யப்பட்ட தரப்பினருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களில், 24 பேர் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
அத்துடன், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளில் ஒரு படகினை செலுத்திய நபருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய இரு படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் படகில் இருந்தமையாலும், மற்றைய படகின் உரிமையாளரின் மகன் குறித்த படகில் இருந்தமையாலும் அவர் தந்தையின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து குற்றத்தினை ஒப்புக் கொண்டமையால் இரு படகுகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |