நிபந்தனையை ஏற்றால் நாங்கள் தயார்! கோட்டாபய அரசாங்கத்திற்கு சஜித் தரப்பின் அதிரடி அறிவிப்பு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை ஒழிக்கும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டால், இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்க தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் இன்று நம்பிக்கையில்லாப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ராஜபக்ஷாகள் மீது நம்பிக்கை இன்மை ஏற்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையின்மைப் பிரச்சினைக்கு தீர்வை காணாது போனால் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாது.
இன்னும் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தவிருக்கும் நிலையில் நாட்டில் நிதியமைச்சர் ஒருவரை நியமிக்கமல் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
