பதவி பறிப்பையடுத்து விமலின் மாபெரும் திட்டம்!
விமல் வீரவன்ச தலைமையில் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிகப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி, அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்தனர் என்ற காரணத்தினால், அண்மையில், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே, கடந்த 2015 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல் தோல்விக்கு பின்னர் நடத்திய “மகிந்த காற்று” என்ற தலைப்பிலான மாபெரும் பொதுக் கூட்டத்தை போன்ற பொதுக் கூட்டத்தை நுகேகொடை நகரில் நடத்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான 10 கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற போதிலும் எதிர்வரும் 29 ஆம் திகதி இந்த பொதுக் கூட்டம் நடத்தப்படலாம் என 10 கட்சிகளுக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதனை தவிர அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்த கட்சிகள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
