இங்கிலாந்திலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
United Kingdom
By Sumithiran
இங்கிலாந்திலுள்ள இலங்கையருக்கான அறிவிப்பு
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பிரித்தானிய வாழ் இலங்கை சமூகத்தினரின் வசதிக்காக, இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 11 ஜூன் 2022 முதல் சனிக்கிழமைகளில் தூதரக சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
வேலை சம்பந்தமான அல்லது வேறு காரணங்களால் திங்கள் முதல் வெள்ளி வரை தங்கள் தூதரகத் தேவைகளுக்காக உயர்ஸ்தானிகராலயத்தின் தூதரகப் பிரிவுக்குச் செல்ல முடியாதவர்களின் வசதிக்காக உயர் ஸ்தானிகராலயம் இந்தச் சேவையை அறிமுகப்படுத்துகிறது.
ஒன் லைனில் பதிவு செய்யும் வசதி
இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்புவோர், https://hclappointments.embassyonline.lk என்ற இணைப்பில் ஒன்லைனில் செய்துகொள்ளக்கூடிய முன் சந்திப்புகளுடன் தூதரகப் பிரிவுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்