இரகசியத் தகவலையடுத்து முற்றுகையிடப்பட்ட விருந்தகம்!
arrest
police
colombo
sri lanka
court
hotel
By Kalaimathy
சிறிலங்காவில் உள்ள விருந்தகம் ஒன்று காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வென்னப்புவ பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே போதைப்பொருளுடன் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள், மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்