போதைப்பொருளில் முக்கிய இலக்காக இலங்கை! ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகியவை கடல் வழிகள் மூலம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய இலக்குகளாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 2024 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் முக்கிய போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு நாடுகளான இலங்கை மற்றும் மாலைதீவுகள், அவற்றின் பெரிய கடற்கரைகள் மற்றும் புவியியல் இருப்பிடம் காரணமாக முக்கிய போதைப்பொருள் கடத்தல் மையங்களாக மாறியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்யும் நாடுகள்
தற்போது, மன்னார், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கல்பிட்டி கடல்கள் வழியாக செல்லும் முக்கிய போக்குவரத்து பாதைகள் பிரதானமாக கேரள கஞ்சா மற்றும் போதைமாத்திரைகள் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்த பயன்படுத்தப்படுகின்றதாக கூறப்படுகிறது.

ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை தெற்கு கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு வர போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயல்பட்டு வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.
படிக மெத் (ஐஸ்) மற்றும் ஹெரோயின் போன்ற செயற்கை மருந்துகள் பெரும்பாலும் இலங்கைக்கு அருகில் அமைந்துள்ள ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் "கோல்டன் கிரசண்ட்" என்று அழைக்கப்படும் நாடுகள் வழியாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மற்றும் ஈரானுக்கு இடையில் அமைந்துள்ள "மக்ரான் கடற்கரை" வழியாக போதைப்பொருள் விநியோகம் தொடங்கி, அவை ஆப்பிரிக்காவிற்கும் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடத்தல்காரர்களின் கடல்வழி
மறுவிநியோகத்திற்காக அவை மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அவற்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அரேபிய கடல், இந்தியப் பெருங்கடல், மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலங்கையை அடைவதாக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் அலுவலகம் (UNODC) தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருட்களை கொண்டு செல்ல கடத்தல்காரர்கள் பெரிய பல நாள் மீன்பிடி கப்பல்கள் மற்றும் பெரிய சரக்குக் கப்பல்களைப் பயன்படுத்துவதாக அது கூறுகிறது.
இலங்கை மற்றும் மாலைத்தீவின் பாதுகாப்புப் படைகள் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்