இடி அமின் ஆட்சியே தற்போது சிறிலங்காவில்!
இலங்கையில் இடியமின் ஆட்சி நிலவுவது போன்ற உணர்வு தோன்றுவதாக சிறிலங்கா சுகாதார ஊழியர்கள் சம்ளேனத்தின் ஒருங்கமைப்பாளர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மை நிலைமையை தற்போது பொதுமக்கள் உணர்ந்து விட்டதாகவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இன்று காலை அனைத்து மருத்துவமனை பணியாளர்கள், அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் மத்திய நிலையத்திற்கு உரித்தான தொழிற்சங்கங்கள் அனைத்தையும் சேவைக்கு அழைத்துள்ளோம்.
மருத்துவ பணியாளர்கள்
குறிப்பாக நாங்கள் அரசாங்கத்திற்கு ஒரு சமிஞ்ஞையை வழங்குவதற்கே முயற்சி செய்தோம். 24 மணித்தியால போராட்டமாகவே நாங்கள் அதைனை முன்னெடுத்தோம்.
அதிபர் மற்றும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையை விடுக்கும் முகமாக இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் ஓய்வு பெற்ற சில தொழிற்சங்க தலைவர்களின் பிழையான கருத்து வெளியீடுகளை சரிப்படுத்தும் நோக்கில் நாங்கள் எங்களின் விளக்கத்தை வழங்கியுள்ளோம்.
இந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. நாட்டில் பணிபுரியும் வர்த்தகத்தினரை அடக்க முயற்சிக்கும் தரப்பினருக்கு எங்களின் எதிர்ப்பையும், எச்சரிக்கையையும் விடுக்கும் முகமாக மாத்திரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே அன்றி பொதுமக்களை இன்னலுக்கு உட்படுத்தும் நோக்கம் இல்லை.
இடி அமின் ஆட்சி போன்றது
அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு இந்த நாட்டில் உள்ள மக்கள் முழுமையாக ஆதரவு வழங்குவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் உண்மை நிலைமையை தற்போது உணர்ந்து விட்டார்கள்.
இடி அமினின் ஆட்சியில் இடம்பெற்றது போன்ற அடக்கும் முறைகள் தற்போது சிறிலங்காவிலும் இடம்பெறுகின்றன” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
