சிறிலங்கா இந்திய அமைச்சர்களின் விசேட சந்திப்பு - இலங்கையின் மீட்சி நோக்கிய நகர்வு!
இலங்கைக்கு அத்தியாவசியமான உதவி தேவைப்படும் இந்தத் தருணத்தில், மேலும் ஒத்துழைப்பை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
A good meeting with Foreign Minister Ali Sabry and other ministerial colleagues this evening in Colombo.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 19, 2023
Discussed India-Sri Lanka cooperation in infrastructure, connectivity, energy, industry and health. pic.twitter.com/6xXRbUHhWF
இதன் போதே இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அர்ப்பணிப்பு
அத்துடன், ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கையின் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரிப்பதற்கான எங்களின் அர்ப்பணிப்பு தொடர்பிலும் வெளியிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய கலந்துரையாடல்
இதன்போது, உட்கட்டமைப்பு இணைப்பு, எரிசக்தி, தொழில் சுகாதாரம் முதலான துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
