ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையை கோரும் ரவிச்சந்திரன்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு தமிழகம் ஸ்ரீபெரம்புத்தூரில் வைத்து தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில் முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் சுமார் 30 வருடங்களை சிறையில் கழித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையதாக ஆயுட் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் சார்பில் இந்திய உயர்நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்படுவாரா?
ஆயுட் தண்டனை பெற்றிருந்த பேரறிவாளன் விடுவிக்கப்பட்டமையை போன்று ஆயுட் தண்டனை கைதியான ரவிச்சந்திரனும் விடுதலை செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்புடன் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நீதித்துறை தரப்பில் நிலவுகிறது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நீதித்துறை பின்னணியை வைத்து கொண்டு ரவிச்சந்திரனும் விடுதலை செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேல்நீதிமன்றில் மனுத் தாக்கல்
முன்னதாக ஆர்.பி.ரவிச்சந்திரன் தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தமது விடுதலையை கோரி சென்னை மேல்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. ஆளுநரின் ஒப்புதல் இந்த விடுதலைக்கு இல்லையென்று கூறியே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பேரறிவாளனை உயர் நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது.
மனுத் தள்ளுபடி
எனினும் அந்த சிறப்பு அதிகாரம் தமது நீதிமன்றுக்கு இல்லை என்று இதன்போது சென்னை மேல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்தே சென்னை மேல்நீதிமன்ற தள்ளுபடிக்கு எதிராக ரவிச்சந்திரன் சார்பில் உயர்நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வரும் வரை தமக்கு இடைக்கால பிணையை கோரியே ரவிச்சந்திரனின் தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
