இலங்கை ஒரு வங்குரோத்தான நாடென சர்வதேச நாடுகள் செய்தி
இலங்கையில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை சர்வதேச நாடுகள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பையடுத்து, இலங்கை ஒரு வங்குரோத்தான நாடென சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் நிலை
இலங்கையில் எதிர்வரும் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமென கடந்த ஜனவரி 5 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்த பின்னணியில், நேற்றையதினம் அதனை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சர்வதேச நாடுகள் இலங்கையின் நிலை குறித்து பல செய்திகளை வெளியிட்டுள்ளதுடன், ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றதன் பின்னரான முதல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டடதாகவும் தெரிவித்துள்ளன.
