யாழில் பரபரப்பு- பேருந்து சாரதியை விசித்திரமான முறையில் தாக்கிய நபர்!
police
sri lanka
jaffna
attack
bus
investigation
neerveli
By Kalaimathy
நீர்வேலியில், பேருந்து சாரதி ஒருவரின் மூக்கை நபர் ஒருவர் வெட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தனியார் பேருந்தை வழிமறித்த நபரொருவரே சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி