தேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ்.இந்துக்கல்லூரி மாணவன்!
இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட National youth championship 2022 இறுதிப் போட்டிகளில் 12 வயதுதிற்கு குறைந்த Open பிரிவில் யாழ்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் பிரகலாதன் ஜனுக்ஷன் தேசிய ரீதியில் 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
8 சுற்றுக்களைக்கொண்ட போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலை அடங்கலாக 6 1/2 புள்ளிகளைப்பெற்றுக்கொண்டதன் மூலம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற தெரிவுப் போட்டிகளில்150ற்கும் மேற்ப்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றிருந்தனர்.
இச்சுற்றுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற வீரர்கள் சர்வதேச மற்றும் ஆசிய ரீதியில் நடைபெறும் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றும் தகைமையை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

