யாழ்ப்பாண கடலில் மிதந்த சடலம் - தடயவியல் காவல்துறை களத்தில்!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Jaffna Teaching Hospital
By Kalaimathy
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத வகையில் முதியவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது கடலில் சடலமொன்று மிதப்பதைக் கண்டுள்ளனர். அதனையடுத்து காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது.
இதனையடுத்து தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், சடலத்தை பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில், முதியவர் தீவகப் பகுதியைச் சேர்ந்த யாசகம் பெறுபவராக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்