தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை பரிதாப பலி!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Kalaimathy
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா என்ற 1வயதும் 10 மாதம் ஆன குழந்தையே உயிரிழந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்த வேளை, அருகில் இருந்த 20 லீட்டர் கொள்ளளவு உடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றினை எடுக்க முற்பட்ட வேளை, வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளது.
அதை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
