நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்தும் முன்னாள் அமைச்சர்!
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்தி வருவதாக வடக்கின் அரசியல்வாதி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் நாக விகாரையில் புத்தர் சிலையை வைக்க தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இது நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்தும் பொய்யாகும். என வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை தவறாக வழி நடத்தும் சரத் வீரசேகர
60 வருடங்களாக யாழ். மாநகர நிர்வாகத்தில் ஈடுபட்டு வரும் சிரேஷ்ட பிரஜை என்ற ரீதியில் இந்தக் கருத்தை தான் கண்டிப்பதாக ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடாந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாக விகாரையில் அவ்வாறானதொரு சம்பவம் நடைபெறவில்லை. அது பொய். பல தசாப்தங்களாக நாக விகாரையுடன் எமக்கு நல்லுறவு உள்ளது. நாக விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எந்தத் தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மதத்தின் பெயரால் தமிழர் நிலங்களை கையப்படுத்த முயற்சி
இந்து கோவில்களின் இடிபாடுகளை பௌத்த இடிபாடுகள் எனக் கூறி பௌத்த விகாரைகளை கட்டுவதற்கும், இந்து தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை மதத்தின் பெயரால் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள்.
தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடகிழக்கிலும் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகளை சுட்டிக்காட்டிய வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர், வடக்கில் உள்ள பௌத்த இடிபாடுகள் தமிழ் பௌத்தத்திற்கு உரியதே அன்றி சிங்கள பௌத்தத்திற்கு உரியது அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்தம் தெற்கில் வந்த போது யாழ்ப்பாணத் தமிழர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்கவில்லை. சங்கமித்தை மாதகல் வழியாக வந்து அனுராதபுரம் சென்று போதி மரத்தை நட்டு பௌத்தத்தை பரப்பினார்.
பொய்ப் பிரச்சாரம் செய்து தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்க முடியாது
பௌத்தத்தின் பெயரால் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறும் சிவஞானம், தமிழ் மக்களின் உரிமைகளை அச்சுறுத்தி பொய்ப் பிரச்சாரம் செய்து நசுக்க முடியாது என வலியுறுத்தியுள்ளார்.
கே.எம்.பி ராஜரத்ன, எப்.ஆர்.ஜயசூரிய, என்.கியூவ் டயஸ், சிறில் மெத்திவ் போன்ற சிங்கள பௌத்த இனவாதிகளை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.
இன்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் அதேவழியிலேயே உள்ளனர். இருந்தாலும் எங்களை அச்சுறுத்தி அழிக்க நினைத்தால் அது இவர்களின் பகல் கனவு எனவும் தெரிவித்துள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 13 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)