செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம் - குழந்தைகளின் புத்தகப்பை, பொம்மை, சப்பாத்து மீட்பு
யாழ்ப்பாணம் (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின் போது நேற்றுடன் மொத்தமாக 38 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன, மேலும் 04 என்புத் தொகுதிகள் நேற்றைய தினம் மாத்திரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் 04 என்பு தொகுதிகள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன, அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராஜா தலைமையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
மனித என்புத் தொகுதிகள்
குறித்த அகழ்வு பணியில் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு அருகில் உள்ள இன்னொரு புதிய இடத்திலும் மனித என்புத் தொகுதிகள் இருக்கலாம் என்ற நிலையில் குறித்த பிரதேசமும் அகழ்வாராய்ச்சியாளர்களால் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் குறித்த பகுதிக்கு அண்மித்த பகுதியிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என்ற சந்தேகத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்காக அந்தப் பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த மனித புதை குழியில் இதுவரை சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியோர் என பலரது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகப்பை, பொம்மை, சப்பாத்து போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
