யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் -வெளியான பின்னணி!
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம்
வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது.
குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு வாள்வெட்டாக மாறுவதற்கு மதுபோதையே காரணம் என பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 17 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்