யாழில் இன்றும் கையெழுத்து வேட்டை!
sri lanka
jaffna
maruthanarmadam
TNA
chunnakam
signature
By Kalaimathy
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் இன்று காலை இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய கையெழுத்து போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன் மற்றும் கே.சயந்தன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எஸ்.பிரகாஸ், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்